கல்வியா செல்வமா வீரமா
கல்வியா செல்வமா வீரமா
நேற்று இரவு (இன்று காலை?) சூரியன் வானொலியில் சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் வரும் கல்வியா செல்வமா வீரமா என்ற பாடலைக் கேட்கும்போது எழுந்த எண்ணங்களைப் பதிவு செய்கிறேன்.
எங்கள் பெற்றோருக்கு நாங்கள் மூன்று செல்வ(ல)ங்கள். இல்லத்தில் எல்லோருக்கும் திரை இசை பிடித்தமானது. பி.யு.சி, எம்.கே.டி., டி.ஆர்.மகா, சி.எஸ்.ஜெ., ஏ.எம்.ஆர்., டி.எம்.எஸ்., ஏ.எல்.ஆர்., ப்பி.பி.எஸ்., லீலாம்மா, ஜிக்கியம்மா, சுசிலாம்மா, ஈஸ்வரியம்மா, ஜானகியம்மா மற்றும் ப(சி)லர் கலக்கிக்கொண்டிருந்த காலம் அது. தொ(ல்)லைக்காட்சியும், ஏன் வானொலிப் பெட்டியும் கூட இல்லத்தில் இல்லாதபோது பொது இடங்களிலும் நண்பர்களின் இல்லங்களிலும் நல்ல பாட்டுகள் ஒலிபரப்பப்பட்டால் இருந்து கேட்டுவிட்டு அதனால் நேரம் கழித்து வந்து வீட்டிலும் பாட்டு(!) கேட்பது வழக்கமாகிவிட்டிருந்தது. கேட்டு கேட்டு பாடல்களின் முழு வரிகளும் மனதில் பதிந்திருந்தன. இரவுவேளைகளில் (அப்போதுதானே எல்லோருடைய இல்லங்களிலும் கதவுகள் மூடப்பட்டிருக்கும் :-)) சில பாடல்களை எல்லோரும் சேர்ந்து பாடும் வழக்கமும் இருந்தது. (யாதோன் கி பாரத் அப்போது வரவில்லை) அப்போது எங்களால் பாடப்படும் சில பாடல்கள்:
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் (ஏதோ கொஞ்சம் கொஞ்சம் அறிந்திருக்கிறோம் என்றுதான் நினைவு)
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது (இப்போது மூவரும் நல்ல நிலையில்தான் இருக்கிறோம்)
ஆறு மனமே ஆறு
கல்வியா செல்வமா வீரமா (இதுதான் அடிக்கடி பாடப்படும் நேயர் விருப்பப் பாடல். பாடலின் இறுதி வரிகளை நினைவிலிருந்து எழுதுகிறேன். தவறிருந்தால் திருத்தவும் / டி.எம்.எஸ். குரலில் பாடிக் கொள்ளவும்)
மூன்று தலைமுறைக்கு நிதி வேண்டுமா - காலம்முற்றும் புகழ் வளர்க்கும் மதி வேண்டுமா தோன்றும் பகை நடுங்கும் படை வேண்டுமா - இவைமூன்றும் துணை இருக்கும் நலம் வேண்டுமா
நன்கு உழைத்துச் சேர்க்கப்படும் செல்வம் மூன்று தலைமுறைகள்தாம் இருக்கும் என்று வேறொரு நண்பரின் வலைப் பதிவில் படித்தது நினைவிற்கு வருகிறது. நம் பாடலாசிரியர் அதை அன்றே எழுதிவிட்டார். நிதி அதிகம் இருந்தாலும் அதைக் கட்டிக்காக்க மதியும் வீரமும் தேவை. மதி அதிகம் இருந்தாலும் நிதி வசதி இல்லாததால் முன்னுக்கு வர முடிவதில்லை. வீரம் மாத்திரம் தனித்து இயங்கவும் முடிவதில்ல. சில நேரங்களில் நிதிக்கு மண்டியிட வேண்டி இருக்கிறது. (இதில் அரசியல் எதுவும் இல்லை) இது போன்ற கருத்துகளை வெட்டியும் ஒட்டியும் எழுதலாம். ஆனால் பாடல் ஆசிரியர் சொல்ல வருவதாக நான் நினைப்பது - நலம் என்ற ஒன்று இருந்தால் - அது உடல் நலமாக இருக்கலாம் அல்லது பிறருக்குத் தீங்கு விளைவிக்காத மன நலமாக இருக்கலாம். அதுவே சிறந்த செல்வம், அது இருந்தால் மற்றவை தானாகவே வந்து சேரும் என்றே நான் நினைக்கிறேன்.
17 Comments:
தமிழ் மணத்தில் இல்லையா நீஙக?
posted by: anandvinay
பதிவிற்கு வாழ்த்துக்கள்! உடல் மற்றும் மன நலம் மிக அவசியம்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
சின்ன சின்ன பத்திகளாக இடம் விட்டு எழுதினால் அவற்றை படிக்க வசதியாய் அழகாய் இருக்கும். செய்யுங்களேன்.
posted by: Positive RAMA
நன்றாக எழுதுகிறீர்கள். நிறைய எழுதுங்கள். பார்ப்பன பதிவனான சிரிகாந்து பதிவுக்கு ஆதரவு அளித்து இருக்கிறீர்கள். அதுதான் வருத்தம் எனக்கு. அவர்களுக்கு பிராமணம் மட்டும் தழைக்க வேண்டும். திமுக, பா.ம.க, ராமதாசு, திருமா, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஒழிய வேண்டும் என நினைப்பு உடையவர்கள். பார்த்து எழுதுங்கள்.
வந்துட்டாங்கையா வந்துட்டாங்கையா
ஆரம்பிச்சிட்டாங்கையா ஆரம்பிச்சிட்டாங்கையா
:-(((((((
Good one. ethoo thesis work pola summa ezhuthi thalli videengale?
mild humerous touch is soo good..
வாங்க அம்பி
தங்கள் வருகைக்கு நன்றி
லதா, நல்லா எழுதறீங்க.. கொஞ்சம் பெரிய fontல எழுத முயற்சி பண்ணுங்களேன். இன்னும், கொஞ்சம் பத்தி பிரிச்சி எழுதினா படிக்க வசதியா இருக்கும் :). தமிழ்மணத்தில் சேர்ந்துடுங்க..
கொடியே, (லதாவின் தமிழாக்கம்) உங்கள் ஊகம் தப்பு. நான் என்றும் 16 தான் என்று நினைக்க நீங்கள் என்னடாவென்றால் 18+ என்கிறீர்களே.
லதா,
அவர் என்னை விட இப்போது பெரியவர், தெரியுமா? நான் விட்டுக் கொடுக்கவே மாட்டேன், என் வயதை. என்னனு நினைச்சீங்க என்னை, அதான் நான் வ.வா.சங்கத்தின் நிரந்தரத் தலைவலியாக இருக்கிறேன். மனசுக்குள் அவங்க எல்லாம் இந்த அம்மா விடவே மாட்டேங்குது, நற நற நற நற நறனு எவ்வளவு சொன்னாலும் என் காதில் விழவே விழாது.
என்ன, இன்னும் பதிவு ஒன்றும் போடவே இல்லை? ஏன் ஏதாவது உடம்பு சரி இல்லையா? ரொம்ப நாள் முன்னாடி எழுதினதுதான் இன்னும் இருக்கு. உடம்பைப் பார்த்துக்கோங்க முதலில். வாழ்க!வளர்க!
லதாஆஆஆஆஆஆஆ,
இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதி கடைசிலே புகழ் எல்லாம் உஷாவுக்கா? கொடுமைடா சாமி,ஒருபக்கம் கரண்ட் கட், மறுபக்கம் update பண்ணுகிறேன் பேர்வழி என்று Tata Indicom Broadband connection link போய்ட்டுப் போய்ட்டு வரும். போனா எப்போ வரும்னே தெரியாது. இதிலே நான் ப்ளாக் எழுதறேனே என்னைப் பாராட்ட வேண்டாமா?
என்னதான் நடக்குது இங்க...
லதா,
இந்த வேலை தானே வேணாங்கறது. உங்களுக்கு என்ன என்னோட வயசு தெரிஞ்சாகணும் அவ்வளவு தானே, இதோ கீழே trc Sir எழுதி இருக்கார் பாருங்க, நான் இன்னும் சின்னப் பெண்தான் என்று, அதில் இருந்தே தெரியலை?
லதா,
இப்பதான் உங்க பதிவு பார்த்தேன். அட! முதல் பதிவில் 'உதவி'. இரண்டாவது பதிவில் 'கச்சேரிக்குத் தயார்'. மூன்றாவது பதிவிலேயே 'ஆட்டம் ஆரம்பம்'. நம்ம பொன்ஸ் சொன்னா மாதிரி பத்தி பிரிச்சு எழுதுங்க. படிக்க வசதியா இருக்கும். வாழ்த்துக்கள்
ஆமா.... நீங்க என்ன வருடத்துக்கு ஒரு பதிவா... தீபாவளி மலர் போல...
லதா அப்ப நீங்க எங்க செட்டா.
அதாவது ரேடியோ---நம்ம வீட்டில்-- இல்லாத காலத்திலிருந்து நான் பாட்டுக் கேட்டு வருகிறேன்.
டி.வி. வந்த பிறகு பாட்டுகள், அவைகளின் சார்ம் இழந்துவிட்டதாக எனக்குத்
தோன்றும்.
அன்புள்ள பொன்ஸ், கீதா சாம்பசிவம், செந்தமிழ் ரவி, ஜி.கௌதம், வசந்த், வல்லி எல்லோருக்கும்,
தங்கள் வருகைக்கு நன்றிகள்.
// பொன்ஸ் said...
கொஞ்சம் பெரிய fontல எழுத முயற்சி பண்ணுங்களேன். இன்னும், கொஞ்சம் பத்தி பிரிச்சி எழுதினா படிக்க வசதியா இருக்கும் :). தமிழ்மணத்தில் சேர்ந்துடுங்க.. //
ஏதோ என்னாலான சிறிய அளவில் :-) எழுத ஆரம்பித்துள்ளேன். தங்களின் ஆலோசனைக்கு நன்றி. தமிழ்மணத்தில் எப்படி இணைவது ?
// valli said...
லதா அப்ப நீங்க எங்க செட்டா.
அதாவது ரேடியோ---நம்ம வீட்டில்-- இல்லாத காலத்திலிருந்து நான் பாட்டுக் கேட்டு வருகிறேன். //
ஆமாம். நான் வல்லி மற்றும் கீதா அவர்களின்;-) செட்.
// டி.வி. வந்த பிறகு பாட்டுகள், அவைகளின் சார்ம் இழந்துவிட்டதாக எனக்குத்தோன்றும். //
ஆனால் தொலைக்காட்சி வந்தபின்தான் பார்க்க நினைத்த, பார்க்காத பல அரிய திரைப்படங்கள், பாடல்கள் பார்க்கும் / கேட்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக நான் எண்ணுகிறேன். அவ்வப்போது ஒலிபரப்பப்பட்டும் நல்ல பாடல்களை கணினியில் MP3 கோப்புகளாக சேமித்துக் கொண்டிருக்கிறேன்.
Post a Comment
<< Home