லதா

லதாவின் எண்ணங்கள்

Thursday, August 04, 2005

கல்வியா செல்வமா வீரமா

கல்வியா செல்வமா வீரமா
நேற்று இரவு (இன்று காலை?) சூரியன் வானொலியில் சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் வரும் கல்வியா செல்வமா வீரமா என்ற பாடலைக் கேட்கும்போது எழுந்த எண்ணங்களைப் பதிவு செய்கிறேன்.
எங்கள் பெற்றோருக்கு நாங்கள் மூன்று செல்வ(ல)ங்கள். இல்லத்தில் எல்லோருக்கும் திரை இசை பிடித்தமானது. பி.யு.சி, எம்.கே.டி., டி.ஆர்.மகா, சி.எஸ்.ஜெ., ஏ.எம்.ஆர்., டி.எம்.எஸ்., ஏ.எல்.ஆர்., ப்பி.பி.எஸ்., லீலாம்மா, ஜிக்கியம்மா, சுசிலாம்மா, ஈஸ்வரியம்மா, ஜானகியம்மா மற்றும் ப(சி)லர் கலக்கிக்கொண்டிருந்த காலம் அது. தொ(ல்)லைக்காட்சியும், ஏன் வானொலிப் பெட்டியும் கூட இல்லத்தில் இல்லாதபோது பொது இடங்களிலும் நண்பர்களின் இல்லங்களிலும் நல்ல பாட்டுகள் ஒலிபரப்பப்பட்டால் இருந்து கேட்டுவிட்டு அதனால் நேரம் கழித்து வந்து வீட்டிலும் பாட்டு(!) கேட்பது வழக்கமாகிவிட்டிருந்தது. கேட்டு கேட்டு பாடல்களின் முழு வரிகளும் மனதில் பதிந்திருந்தன. இரவுவேளைகளில் (அப்போதுதானே எல்லோருடைய இல்லங்களிலும் கதவுகள் மூடப்பட்டிருக்கும் :-)) சில பாடல்களை எல்லோரும் சேர்ந்து பாடும் வழக்கமும் இருந்தது. (யாதோன் கி பாரத் அப்போது வரவில்லை) அப்போது எங்களால் பாடப்படும் சில பாடல்கள்:
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் (ஏதோ கொஞ்சம் கொஞ்சம் அறிந்திருக்கிறோம் என்றுதான் நினைவு)
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது (இப்போது மூவரும் நல்ல நிலையில்தான் இருக்கிறோம்)
ஆறு மனமே ஆறு
கல்வியா செல்வமா வீரமா (இதுதான் அடிக்கடி பாடப்படும் நேயர் விருப்பப் பாடல். பாடலின் இறுதி வரிகளை நினைவிலிருந்து எழுதுகிறேன். தவறிருந்தால் திருத்தவும் / டி.எம்.எஸ். குரலில் பாடிக் கொள்ளவும்)
மூன்று தலைமுறைக்கு நிதி வேண்டுமா - காலம்முற்றும் புகழ் வளர்க்கும் மதி வேண்டுமா தோன்றும் பகை நடுங்கும் படை வேண்டுமா - இவைமூன்றும் துணை இருக்கும் நலம் வேண்டுமா
நன்கு உழைத்துச் சேர்க்கப்படும் செல்வம் மூன்று தலைமுறைகள்தாம் இருக்கும் என்று வேறொரு நண்பரின் வலைப் பதிவில் படித்தது நினைவிற்கு வருகிறது. நம் பாடலாசிரியர் அதை அன்றே எழுதிவிட்டார். நிதி அதிகம் இருந்தாலும் அதைக் கட்டிக்காக்க மதியும் வீரமும் தேவை. மதி அதிகம் இருந்தாலும் நிதி வசதி இல்லாததால் முன்னுக்கு வர முடிவதில்லை. வீரம் மாத்திரம் தனித்து இயங்கவும் முடிவதில்ல. சில நேரங்களில் நிதிக்கு மண்டியிட வேண்டி இருக்கிறது. (இதில் அரசியல் எதுவும் இல்லை) இது போன்ற கருத்துகளை வெட்டியும் ஒட்டியும் எழுதலாம். ஆனால் பாடல் ஆசிரியர் சொல்ல வருவதாக நான் நினைப்பது - நலம் என்ற ஒன்று இருந்தால் - அது உடல் நலமாக இருக்கலாம் அல்லது பிறருக்குத் தீங்கு விளைவிக்காத மன நலமாக இருக்கலாம். அதுவே சிறந்த செல்வம், அது இருந்தால் மற்றவை தானாகவே வந்து சேரும் என்றே நான் நினைக்கிறேன்.

சோதனை முயற்சி

9 8 7 6 5 4 3 2 1 0
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ ஃ
க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன
ஜ ஹ ஷ ஸ

சோதனை முயற்சி